முகப்பு
 
 
 
 

 

இறைவனின் மடியில்
திருத்தந்தை பிரான்சிஸ்

மண்ணில் 17-12.1936 விண்ணில் 21-04-2025

போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.
போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். "அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.

சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, "அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்" என்று கூறினார். ஆசிர்வாதம் வழங்கிய பிறகு, அவர் வாகனத்தில் ஏறி வாடிகன் சதுக்கத்தைச் சுற்றிவந்தார். அந்த நேரத்தில், பல முறை வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு "ஈஸ்டர் வாழ்த்துகள்" தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.

 

 அற்புதமானது ஆனால் ஆச்சரியத்துக்குரியதல்ல இந்தப் புகைப்படம்.

நம் இறுதி மூன்று திருத்தந்தையரும் ஒன்றாய் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் போல்திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 

திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ்


 
எதிர்காலத்தை அறிந்த நம்ஆண்டவர் இயேசுவின் அற்புதமான செயற்பாட்டினை எம்மால் புரிந்து கொள்ள முடியுமா?..

  

Copyright 2000 Catholic New Life Tamil Ministry Canada. All rights reserved.