|
1
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து
எனக்கு உதவி வரும்?
2
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு
உதவி வரும்.
3
அவர் உம் கால் இடறாதபடி பா்த்துக் கொள்வார்; உம்மைக்
காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்.
4 இதோ!
இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும்
இல்லை.
5
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில்
உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்!
6
பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத்
தீண்டாது.
7
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர்
உம் உயிரைக் காத்திடுவார்.
8
நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும்
ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.
|