குழந்தை இயேசு பெருநாள் ஞாயிறு திருப்பலி 15- 01- 2023
புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் புதுவருட திருப்பலி
புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் கிறிஸ்து பிறப்பு விழா படங்கள்
புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம்திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு திருப்பலி 18- 12- 2022
புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் கோடைகால ஒன்றுகூடல் 2022
அருட்பணி யூட் அமலதாஸ் செபஸ்தியாம்பிள்ளை அடிகளாரின் குருத்துவப் பணிவாழ்வின் பொன்விழா


புனித அந்தோனியாரின் திருவுடலின் திருப்பண்டம் ரோமாபுரியில் இருந்து மன்னார் மறைமாவட்டத்திற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் தந்தை அவர்களினால் கொண்டுவரப்பட்டு, தற்போது அந்த திருப்பண்டம் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பவனியாக மன்னார் மதவாச்சி பிரதான வீதி வழியாக மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது பெரிய யாத்திரை ஸ்தலமாகிய பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலயத்தில் நிரந்தரமாக வைக்கும் பொருட்டும். இவ்வாண்டுக்கான பெரியகட்டு அந்தோனியார் ஆலய கொடியேற்ற தினமாகிய இன்றைய தினம் பவணியாக எடுத்துச் செல்லப்பட்டது.
மட்டக்களப்பு மறைமாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அருட்சகோதரர்கள் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு செங்கலடி புனித நீக்கொலஸ் ஆலயத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா அவர்களின் தலைமையில் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர்களான கிறிஸ்தோப்பர் வின்சன்ஸ்லோஸ், கர்சதன் ரிச்சட்சன் ஆகியோர் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.