மடு
தேவாலயத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று
ஆரம்பம்
மடு தேவாலயத்தில் ஆவணித்
திருவிழா நேற்று 6ஆம் திகதி வியாழக்கிழமை
கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. காலை 11.00
மணியளவில் கொடியேற்றப்பட்டது.
இதையடுத்து கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
தமிழ் சிங்கள மொழிகளில் அருட்தந்தையர்கள்
கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.
வடக்கு தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த சுமார்
1200 பக்தர்கள் திருப்பலியில் கலந்து
கொண்டனர். அதே வேளை அமைச்சர்களான சரத்
குணவர்த்தன மில்ரோய் பெர்னாண்டோ ஆகியோரும்
ஆலயத்துக்கு வந்திருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ்
நிலையங்களைச் சேர்ந்த 800 பொலிஸார் உட்பட
1200 பேர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
Copyright 2000 Catholic New Life Good News Group. All rights reserved.