|

fr;rjPT
Gdpj me;NjhdpahH jpUtpoh.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும்
இடையிலான கடல்பரப்பில் அமைந்துள்ள
கச்சத்தீவின் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா கடந்த பல
ஆண்டுகளாக,
பாதுகாப்பு
கெடுபிடிகள் காரணமாக சர்ச்சைக்குள்ளாகி வந்தது.
குறிப்பாக இலங்கையில்
விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை
ராணுவத்துக்கும் இடையிலான ஆயுத மோதல் காரணமாக,
கடந்த
ஆண்டுகளில் கச்சத்தீவுக்கு
செல்ல தமிழக
மீனவர்கள் முயன்றபோது,
அதற்கு இந்திய
கடற்படையும் இலங்கை அரசும் உரிய
அனுமதிகள் அளிக்காமல் தடுப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன.
சில
ஆண்டுகளில் இந்த திருவிழா முற்றாக
நிறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
விடுதலைப்புலிகள் அமைப்பை
இலங்கை ராணுவம் தோற்கடித்துவிட்டதாக
இலங்கை
அரசு அறிவித்த பிறகு நடக்கும் முதல் திருவிழா என்பதால்,
கச்சத்தீவு புனித
அந்தோணியார்
திருவிழா குறித்து தமிழ்நாட்டின் தென் பகுதியிலும்,
இலங்கையின்
வடக்கிலும்
மேலதிக ஆர்வம் காணப்பட்டது.
இந்தியாவிலிருந்தும்,
இலங்கையிலிருந்தும் நூற்றுக்கணக்கான
பக்தர்கள் கச்சத்தீவு சென்று சுமுகமான சூழ்நிலையில்
திருவிழா நடத்தியதாக கச்சத்தீவு
சென்றிருந்த ஹிந்து நாளிதழின் செய்தியாளர் ஜெய்சங்கர்
தமிழோசைக்கு அளித்த
செவ்வியில்
தெரிவித்தார்.
இந்த ஆண்டு திருவிழாவுக்கான
ஏற்பாடுகளை யாழ் மறை மாவட்டம் நல்ல
முறையில் செய்திருந்ததாகவும்,
இந்திய
இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை
முறையாக செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.
Gp.gp.rp jkpNohir-28.02.2010.

கச்சத்தீவு
விழா பண்ட பரிமாற்றம் : தமிழர்களுக்கு ஏமாற்றம்
ராமநாதபுரம் :கச்சத்தீவு திருவிழாவில் பண்ட பரிமாற்றம்
செய்ய சென்ற தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.கச்சத்தீவு
விழா நடைபெறும்
காலங்களில்,
இலங்கையிலிருந்து வருபவர்களிடம்,
தமிழகத்திலிருந்து செல்பவர்கள் பண்ட
பரிமாற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இங்கிருந்து செல்பவர்கள் கைலி,
சுடிதார்,
ரெடிமேட்
சட்டைகள்,
பேன்சி,அழுகு
சாதன பொருட்கள்,வளையல்கள்
உள்ளிட்ட பல்வேறு பொருட்களை
இலங்கையர்களிடம் கொடுத்து,
அதற்கு பதிலாக சோப்,
பால் பவுடர்,
தேங்காய் எண்ணெய்,
டீ
தூள் உள்ளிட்ட பொருட்களை பெற்று வந்தனர்.இடையில்
இலங்கையில் ஏற்பட்ட போரால்
கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இலங்கை பிரச்னை
முடிவுக்கு வந்த நிலையில்,
மீண்டும் கச்சத்தீவு விழா நடைபெறும் என இலங்கை அரசு
அறிவித்தது. அதன்படி
தமிழர்களும் பொருட்களை சேகரிக்கத் துவங்கினர். நீண்ட
இடைவெளிக்கு பின் போவதால்
பொருட்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும் என்ற
எதிர்பார்ப்பில்,
விலை உயர்ந்த
கைலிகள்,
பேன்சி,
அழகு சாதன பொருட்கள் என பலவகையான பொருட்களை சேகரித்து
சென்றனர்.
ராமேஸ்வரம் தீவு பகுதிகளிலிருந்து
2,910பேர்
சென்றனர்.
ஆனால் இலங்கையிலிருந்து
800
பேர் மட்டுமே வந்துள்ளனர். இதிலும் இலங்கையிலிருந்து
வந்தவர்களில் சிலர் மட்டுமே பண்ட பரிமாற்றத்திற்கான
பொருட்களை கொண்டு வந்துள்ளனர்.
இலங்கையர் ஒரு நபரிடம் ஐந்துக்கும் அதிகமானோர் நாடவே,
இலங்கையர்கள் தாங்கள் கொண்டு
வந்த சோப் மூன்றை (ரூ.60மதிப்பு)கொடுத்து
300
ரூபாய் மதிப்புள்ள கைலியை
கேட்டுள்ளனர். தமிழர்கள் பொருட்களுக்கு விலை குறைவாகவும்,
இலங்கை பொருட்களுக்கு
விலை அதிகமாகவும் கூறியதால்,
பண்ட பரிமாற்றம் செய்ய நினைத்த தமிழர்கள்
ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் சிலர்
,இலங்கை
பொருட்களை வாங்க வேண்டும் என்ற
எண்ணத்தில் அதிக மதிப்புடைய பொருட்களை கொடுத்து சோப்பு,
பால் பவுடர்களை
வாங்கிவந்தனர்.
jpdkyH
–
03.02.2010.
|