|
|
திருப்பலி
முன்னுரை
கிறிஸ்துவில்
பிரியமுள்ளவர்களே
சசோதர
சகோதிரியரே
இளைய
உள்ளங்களே
சிறார்களே
உங்கள்
அனைவரையும்
நற்கருணை
பீடத்திற்கு
ஒரே
சமூகமாக
பங்கெடுக்க
அழைப்பதில்
பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த
வாரநாட்களில்
நாம்
பெற்ற
ஆசீருக்காக
அனுபவித்த
நலன்களுக்காக
இறைவனை
போற்றி
புகழ்வோம்.
அழைக்கப்பெற்றவர்களே,
பொதுக்காலத்தின்
பதினைந்தாம்
ஞாயிறு
திருப்பலியை
கொண்டாட
உங்களை
அன்புடன்
வரவேற்கிறோம்..
இன்றைய
நற்செய்தி
வாசகத்தில்
இயேசு
தம்
சீடர்களுக்கு
நற்செய்தி
அறிவிப்புப்
பணியை,
இறைவாக்குப்
பணியை
வழங்கி
கொடுத்த
அறிவுரைகளை
வாசிக்கிறோம்.
இயேசு
பன்னிருவரையும்
தம்மிடம்
அழைத்து,
அவர்களை
இருவர்
இருவராக
நற்செய்திப்
பணியாற்ற
அனுப்பினார்
என்னும்
செய்தியை
இன்றைய
சிந்தனைக்குக்
கருவாக
எடுத்துக்கொள்வோம்.
ஏன்
இயேசு
தம்
சீடரை
இருவர்
இருவராக
அனுப்பினார்?
இணைந்து
பணியாற்றும்
பண்பைக்
கற்றுக்கொள்வதற்காகத்தான்
என்று
தோன்றுகிறது:.
இறையாட்சிப்
பணி
என்பது
தனி
நபரின்
பணி
அல்ல.
அது
ஒரு
கூட்டுப்
பணி.
தனி
நபர்கள்
ஏற்படுத்தும்
மாற்றங்களைவிட,
குழுக்கள்
ஏற்படுத்தும்
தாக்கம்
அதிகம்
என்பது
நாம்
அறிந்ததே.
எனவே,
தனி
நபரின்
திறன்களிலும்,
ஆற்றலிலும்
மட்டும்
நம்பிக்கை
வைக்காமல்,
அடுத்தவரது
திறன்களையும்
பயன்படுத்துகின்ற
பொதுமைப்
பண்பை
இணைந்து
பணியாற்றுதல்
கற்றுத்
தருகிறது.
மேலும்,
இருவர்
இருவராகச்
சென்று
பணியாற்றும்போது,
தனிமை,
மன
உளைச்சல்,
பாதுகாப்பின்மை,
வழிகாட்டுதல்
இன்மை
போன்ற
சிக்கல்களிலிருந்து
விடுவிக்கப்படுகிறோம்.
இருவராகப்
பணியாற்றுவது
உளவியல்
பாதுகாப்பு
தருகிறது.
எனவேதான்,
இயேசு
தம்
சீடர்களை
இருவர்
இருவராக
அனுப்பினார்
என்று
எடுத்துக்கொள்ளலாம்.
நாமும்
பணத்துக்கோ,
பொருளுக்கோ,
உலக
இன்பங்களுக்கோ
அடிமையாகாதபடி,
இறைவன்மீது
மட்டுமே
தம்
நம்பிக்கையை
வைக்கவும்,
இணைந்து
பணியாற்றும்
கலையில்
வளர
வரம்
வேண்டி
இத்திருப்பலியில்
பங்கேற்போம்.
முதல் வாசகம்
இறைவாக்கினர்
ஆமோஸ்
நூலிலிருந்து
வாசகம்
7:
12-15
அந்நாள்களில்
பெத்தேலின்
குருவாகிய
அமட்சியா
ஆமோசைப்
பார்த்து,
``காட்சி
காண்பவனே,
இங்கிருந்து
போய்விடு;
யூதாவின்
நாட்டுக்கு
ஓடிவிடு;
அங்கே
போய்
இறைவாக்கு
உரைத்து,
உன்
பிழைப்பைத்
தேடிக்கொள்.
பெத்தேலில்
இனி
ஒருபோதும்
இறைவாக்கு
உரைக்காதே;
ஏனெனில்,
இது
அரசின்
புனித
இடம்,
அரசுக்குரிய
இல்லம்''
என்று
சொன்னான்.
ஆமோஸ்
அதற்கு
மறுமொழியாக
அமட்சியாவைப்
பார்த்துக்
கூறினார்:
``நான்
இறைவாக்கினன்
இல்லை;
இறைவாக்கினர்
குழுவில்
உறுப்பினனும்
இல்லை;
நான்
ஆடு
மாடு
மேய்ப்பவன்,
காட்டு
அத்திமரத்
தோட்டக்காரன்.
ஆடுகள்
ஓட்டிக்
கொண்டுபோன
என்னை
ஆண்டவர்
தேர்ந்தெடுத்து,
`என்
மக்களாகிய
இஸ்ரயேலிடம்
சென்று,
இறைவாக்கு
உரைத்திடு'
என்று
அனுப்பினார்.''
- இது
ஆண்டவர்
வழங்கும்
அருள்வாக்கு.
-
இறைவா
உமக்கு
நன்றி
பதிலுரைப் பாடல்
திருப்பாடல்:
85:
8யb-9.
10-11.
12-13
(பல்லவி:
7)
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.
பல்லவி
8யb
ஆண்டவராம்
இறைவன்
உரைப்பதைக்
கேட்பேன்;
தம்
மக்களுக்கு,
தம்
பற்றுமிகு
அடியார்க்கு
நிறைவாழ்வை
அவர்
வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு
அஞ்சி
நடப்போர்க்கு
அவரது
மீட்பு
அண்மையில்
உள்ளது
என்பது
உறுதி;
நம்
நாட்டில்
அவரது
மாட்சி
குடிகொள்ளும்.
பல்லவி
10
பேரன்பும்
உண்மையும்
ஒன்றையொன்று
சந்திக்கும்;
நீதியும்
நிறைவாழ்வும்
ஒன்றையொன்று
முத்தமிடும்.
11
மண்ணினின்று
உண்மை
முளைத்தெழும்;
விண்ணினின்று
நீதி
கீழ்நோக்கும்.
பல்லவி
12
நல்லதையே
ஆண்டவர்
அருள்வார்;
நல்விளைவை
நம்
நாடு
நல்கும்.
13
நீதி
அவர்முன்
செல்லும்;
அவர்தம்
அடிச்சுவடுகளுக்கு
வழி
வகுக்கும்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
திருத்தூதர்
பவுல்
எபேசியருக்கு
எழுதிய
திருமுகத்திலிருந்து
வாசகம்
1:
3-14
நம்
ஆண்டவராகிய
இயேசு
கிறிஸ்துவின்
தந்தையும்
கடவுளுமானவர்
போற்றி!
அவர்
விண்ணகம்
சார்ந்த,
ஆவிக்குரிய
ஆசி
அனைத்தையும்
கிறிஸ்து
வழியாக
நம்மீது
பொழிந்துள்ளார்.
நாம்
தூயோராகவும்,
மாசற்றோராகவும்
தம்
திருமுன்
விளங்கும்படி,
உலகம்
தோன்றுவதற்கு
முன்பே
கடவுள்
நம்மைக்
கிறிஸ்து
வழியாகத்
தேர்ந்தெடுத்தார்.
அவர்
நம்மை
இயேசு
கிறிஸ்துவின்
மூலம்
தமக்குச்
சொந்தமான
பிள்ளைகளாக்கிக்கொள்ள
அன்பினால்
முன்குறித்து
வைத்தார்.
இதுவே
அவரது
விருப்பம்;
இதுவே
அவரது
திருவுளம்.
இவ்வாறு
தம்
அன்பார்ந்த
மகன்
வழியாக
நம்மீது
ஒப்புயர்வற்ற
அருளைப்
பொழிந்
தருளியதால்
அவரது
புகழைப்
பாடுகிறோம்.
கிறிஸ்து
இரத்தம்
சிந்தி
தம்
அருள்வளத்திற்கு
ஏற்ப
நமக்கு
மீட்பு
அளித்துள்ளார்;
இம்மீட்பால்
குற்றங்களிலிருந்து
நாம்
மன்னிப்புப்
பெறுகிறோம்.
அந்த
அருளை
அவர்
நம்மில்
பெருகச்
செய்து,
அனைத்து
ஞானத்தையும்
அறிவுத்
திறனையும்
தந்துள்ளார்.
அவர்
தமது
திருவுளத்தின்
மறைபொருளை
நமக்குத்
தெரியப்படுத்தியுள்ளார்.
இது
கிறிஸ்து
வழியாகக்
கடவுள்
விரும்பிச்
செய்த
தீர்மானம்.
கால
நிறைவில்
விண்ணிலுள்ளவை,
மண்ணிலுள்ளவை
அனைத்தையுமே
கிறிஸ்துவின்
தலைமையில்
ஒன்று
சேர்க்கவேண்டும்
என்ற
திட்டமே
அம்மறைபொருள்.
கடவுள்
தமது
திருவுளத்தின்
திட்டத்தின்படி
அனைத்தையும்
செயல்படுத்தி
வருகிறார்.
அவரது
தீர்மானத்தால்
நாம்
முன்குறிக்கப்பட்டு,
கிறிஸ்து
வழியாய்
அவரது
உரிமைப்
பேற்றுக்கு
உரியவரானோம்.
இவ்வாறு
கிறிஸ்துவின்
மேல்
முதலில்
நம்பிக்கை
வைத்த
நாங்கள்
கடவுளுடைய
மாட்சியைப்
புகழ்ந்துபாட
வேண்டுமென
அவர்
விரும்பினார்.
நீங்களும்,
உங்களுக்கு
மீட்பளிக்கும்
நற்செய்தியாகிய
உண்மையின்
வார்த்தையைக்
கேட்டு,
அவர்மீது
நம்பிக்கை
கொண்டு,
வாக்களிக்கப்பட்ட
தூய
ஆவியால்
அவருக்குள்
முத்திரையிடப்பட்டீர்கள்.
அந்தத்
தூய
ஆவியே
நாம்
மீட்படைந்து
உரிமைப்பேறு
பெறுவோம்
என்பதை
உறுதிப்படுத்தும்
அடையாளமாக
இருக்கிறது.
இவ்வாறு
கடவுளது
மாட்சியின்
புகழ்
விளங்கும்.
- இது ஆண்டவர் வழங்கும்
அருள்வாக்கு.
-
இறைவா
உமக்கு
நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா,
அல்லேலூயா!
கடவுளுடைய
அழைப்பு
உங்களுக்கு
எத்தகைய
எதிர்நோக்கைத்
தந்துள்ளது
என்று
நீங்கள்
அறியுமாறு
உங்கள்
அகக்கண்கள்
ஒளியூட்டப்
பெறுவனவாக!
அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நற்செய்திக்கு
முன்
வசனம்
இயேசு பன்னிருவரையும் இருவர் இருவராக
அனுப்பினார்.
மாற்கு
எழுதிய
நற்செய்தியிலிருந்து
வாசகம்
6:
7-13
அக்காலத்தில்
இயேசு
பன்னிருவரையும்
தம்மிடம்
வரவழைத்து,
அவர்களை
இருவர்
இருவராக
அனுப்பத்
தொடங்கினார்.
அவர்களுக்குத்
தீய
ஆவிகள்மீது
அதிகாரமும்
அளித்தார்.
மேலும்,
``பயணத்திற்குக்
கைத்தடி
தவிர
உணவு,
பை,
இடைக்கச்சையில்
செப்புக்
காசு
முதலிய
வேறு
எதையும்
நீங்கள்
எடுத்துக்கொண்டு
போகவேண்டாம்.
ஆனால்
மிதியடி
போட்டுக்கொள்ளலாம்;
அணிந்திருக்கும்
அங்கி
ஒன்றே
போதும்''
என்று
அவர்களுக்குக்
கட்டளையிட்டார்.
மேலும்
அவர்,
``நீங்கள்
எங்கேயாவது
ஒரு
வீட்டுக்குள்
சென்றால்,
அங்கிருந்து
புறப்படும்வரை
அவ்வீட்டிலேயே
தங்கியிருங்கள்.
உங்களை
எந்த
ஊராவது
ஏற்றுக்கொள்ளாமலோ
உங்களுக்குச்
செவிசாய்க்காமலோ
போனால்
அங்கிருந்து
வெளியேறும்பொழுது,
உங்கள்
கால்களில்
படிந்துள்ள
தூசியை
உதறிவிடுங்கள்.
இதுவே
அவர்களுக்கு
எதிரான
சான்றாகும்''
என்று
அவர்களுக்குக்
கூறினார்.
அப்படியே
அவர்கள்
புறப்பட்டுச்
சென்று
மக்கள்
மனம்
மாற
வேண்டுமென்று
பறைசாற்றினார்கள்;
பல
பேய்களை
ஓட்டினார்கள்;
உடல்
நலமற்றோர்
பலரை
எண்ணெய்
பூசிக்
குணப்படுத்தினார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும்
நற்செய்தி.
-
கிறிஸ்துவே
உமக்கு
புகழ்.
இறைமக்களின் வேண்டல்கள்:
நம்
வானகத்
தந்தை
அன்பில்
நிறைந்தவர்,
அருளில்
சிறந்தவர்.
நாமும்
நம்
வாழ்வின்
குறைகள்
நீங்கி
நிறை
வாழ்வைப்
பெற,
நமக்குத்
தேவையான
அருள்
வரங்களை
இறைவனிடம்
மன்றாடிக்கேட்போம்.
பதில்
:
ஆண்டவரே
எங்கள்
மன்றாட்டைத்
தயவாய்
கேட்டருளும்.
“என்னை
அனுப்பியவரின்
விருப்பத்தை
நிறைவேற்றவே
நான்
விண்ணிலிருந்து
இறங்கி
வந்தேன்”
என்று
கூறிய
நற்கருணை
நாதரே.
புரட்சிகர
புதிய
கண்டு
பிடிப்புக்கள்,
கவர்ச்சியை
காசாக்கும்
காரியங்கள்,
மானிடத்தை
மாயைக்குள்
அழைத்து
செல்ல,
மனித
மாண்பற்ற
தன்மைகளால்,
பண்பற்ற
கலாசார
நிலைகளால்
ஆன்மீகத்தை
அழிவு
நிலைக்குள்ளாக்கும்
எமக்கு
அருள்
வழிகாட்டி
நிறைவாழ்வை
நோக்கி
எம்மை
அழைத்துச்
செல்லும்
பாப்பானவர்
ஆயார்கள்
அருள்பணியாளர்கள்
மற்றும்
அனைவரையும்
ஆசிர்வதித்து
அவர்கள்
நாளும்
பயனிக்கும்
சறுக்கான
பாதைவழியே
வழுக்காமல்
உம்மை
நோக்கி
சென்று
என்றும்
உம்
திருவுளத்தை
நிறைவேற்ற
நீரே
அவர்களுக்கு
துணையாக
இருந்தருள
வேண்டு
என்று
உம்மை
மன்றாடுகிறோம்.
“என்னிடம் வருபவரை நான் புறம்பே
தள்ளிவிடமாட்டேன்”
என்று
திருவாய்
மொழிந்த
இயேசுவே,
இன்றைய
நிகழ்காலப்
பேரழிவுகளால்
பெரும்
துயருற்று
எதிர்
கால
ஏக்கங்களை
உள்ளங்களில்
சுமந்துகொண்டு
வீங்கிய
இதயத்துடன்
விரக்தியின்
விழிம்பில்
இருந்து
கொண்டு
கற்பனைகளையும்
கனவுகளையும்
காற்றிலே
பறக்க
விட்டு
வாடி
நிற்கும்
எம்
இளைஞர்களை
ஒருகணம்
கண்நோக்கிபாரும்.
ஆண்டவரே
நாம்
உம்மையே
நாடி
வருகின்றோம்.
எம்
ஏக்கங்களை
துடைத்தருளும்
எம்
விரக்திகளை
மகிழ்வாக்கியருளும்
எம்
கனவுகளை
கனிகளாக்கியருளும்
கடவுளே
என்றும்
உம்பணியில்
எம்
கால்கள்
நடந்து
வாழ்வை
கண்டடைய
வரமருள
வேன்டும்
என்று
உம்மை
மன்றாடுகிறோம்.
“வாழ்வு தரும்
உணவு
நானே”
எனக்கூறிய
நற்கருணை
நாதரே
உலகின்
பலபாகங்களிலும்
வசிக்கும்
எமது
பங்கு
மக்களை
உமது
கரங்களில்
ஒப்படைக்கின்றோம்.
அவர்களின்
உள்ளக்கிடக்கைகளை
ஏக்கத்தவிப்புக்களை
நீரே
பூர்த்தி
செய்தருளும்.
அவர்கள்
அனைவரும்
வாழ்வுதரும்
உணவாகிய
உம்மையே
பெற்றுக்கொள்ளவும்
உம்மையே
ஆர்வத்தோடு
தேடவும்
உலகில்
பசியோடு
தம்மைசுற்றி
தவிப்பவர்களுக்கு
பசிபோக்கும்
கருவியாக
மாறவும்
நீர்
வழித்துணையாக
வேண்டும்
என்று
இறைவா
உம்மை
மன்றாடுகின்றோம்.
“என்னிடம் வருபவரை நான் புறம்பே
தள்ளிவிடமாட்டேன்”
என்று
திருவாய்
மொழிந்த
இயேசுவே
இன்றைய
நிகழ்காலப்
பேரழிவுகளால்
பெரும்
துயருற்று
எதிர்
கால
ஏக்கங்களை
உள்ளங்களில்
சுமந்துகொண்டு
வீங்கிய
இதயத்துடன்
விரக்தியின்
விழிம்பில்
இருந்து
கொண்டு
கற்பனைகளையும்
கனவுகளையும்
காற்றிலே
பறக்க
விட்டு
வாடி
நிற்கும்
எம்
இளைஞர்களை
ஒருகணம்
கண்நோக்கிபாரும்.
ஆண்டவரே
நாம்
உம்மையே
நாடி
வருகின்றோம்.
எம்
ஏக்கங்களை
துடைத்தருளும்
எம்
விரக்திகளை
மகிழ்வாக்கியருளும்
எம்
கனவுகளை
கனிகளாக்கியருளும்
கடவுளே
என்றும்
உம்பணியில்
எம்
கால்கள்
நடந்து
வாழ்வை
கண்டடைய
வரமருள
வேன்டும்
இறைவா
உம்மை
மன்றாடுகின்றோம்.
”சுமைசுமந்து சோர்ந்திருப்போரே
எல்லாரும்
என்னிடம்
வாருங்கள்
உங்களை
நான்
இளைப்பாற்றுவேன்;”
என்று
கூறிய
இயேசுவே.
மரத்துப்போன
மனதுடனே,
மனிதங்கள்
மட்டும்
வாழ
அதிகார
வெறியில்
ஆணவம்
பாடுகின்றனர்
இன்றைய
ஆட்சியாளர்கள்.
இதனால்
இனியும்
இழக்க
ஏதுமின்றி
விழியோரத்தில்
முடிவில்லா
சுமைகளை
சுமந்தபடி
வழியோரம்
வருகின்றன
எம்
வாழ்க்கை.
வேறேங்கும்
கிட்டாத
மன
ஆறுதல்
உமது
இல்லத்தில்
கிட்டும்
என்ற
நம்பிக்கையுடன்
உம்
அண்டை
ஓடோடி
வருகின்றோம்
நாம்.
எம்
மனவேதனைகள்
மகிழ்சியாகமாற்றும்,
இழப்பால்
இடிந்து
போன
எம்
இதயங்களுக்கு
இன்றைய
உம்
இனிமைகள்
எல்லாம்
நிரந்தரமாக
கிடைக்க
துணைபுரிய
வேண்டுமென்று
உம்மை
மன்றாடுகிறோம்.
“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில்
மகிழ்ச்சி
பெறுவர்”
என்று
திருவாய்
மொழிந்த
கடவுளே.
உரிமைகள்
இழந்து
நாம்
இன்று
வேடர்
கண்ணியின்று
தப்பிப்
பிழைத்த
பறவைபோல்
ஆனோம்.
அதிகார
வாதிகளால்
அலைக்களிக்கப்
படுகின்றோம்.
ஒடுக்கப்பட்ட
ஒரினமாக
நாம்
தவிக்கின்றோம்
ஏறெடுத்துப்
பார்க்க
யாருமின்றி,
ஏக்கங்கள்
மத்தியில்
ஏன்
இந்த
வாழ்க்கை
என
எம்
இதயம்
கேட்கிறது.
எனினும்
எம்
வாழ்விற்கு
ஒளி
தரும்
விடிவெள்ளியாக
உம்மையே
எண்ணி
வருகின்றோம்
எம்
ஏக்கங்களை
துடைத்தருளும்
எம்
தவிப்புக்களை
மகிழ்வாக்கியருளும்.
இவற்றினூடாக
நாம்
நிரந்தர
நிம்மதியான
வாழ்வை
கண்டடைய
வரமருள
வேண்டுமென்று
உம்மை
மன்றாடுகிறோம்.
|
|
|
|
|
God Bless You |
|
|
|
|
|