|
மல்லாகம் புனித சதாசகாய மாதா அன்னையின்
வருடாந்தத் திருவிழா
நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு
விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
திருவிழா திருப்பலி காலை 7.00 மணிக்கு ஆலய
முன்றலில் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர்
அருட் தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
சுன்னாகம், ஏழாலை, மல்லாகம், தெல்லிப்பளை,
அளவெட்டி என பல இடங்களிலிருந்தும் மக்கள்
இந்தத் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
திருப்பலியைத் தொடர்ந்து மாதாவின்
திருச்சுரூப பவனி இடம்பெற்றது.
|