|
கொழும்பு புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம் இன்று.
கொழும்பு
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம் இன்று காலை
நடைபெற்றது.
இன்று
காலை
6.00
மணிக்கு இடம்பெற்ற திருப்பலியையடுத்து
7.30
மணியளவில்,
ஆலயப்
பரிபாலகர் அருட்திரு.
கிளமண்ட் ரொசாரியோ அடிகளார்
தலைமையில்
கொடியேற்றப்பட்டு
ஆலய
வருடாந்த திருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.
175
ஆவது ஜுபிலி விழாவைக்
கொண்டாடும்,
புனித
அந்தோனியார் ஆலயத் திருவிழா,
இன்றிலிருந்து
9
தினங்கள் நவநாள்
நடத்தப்பட்டு எதிர்வரும்
13 ஆம்
திகதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.





|