கிறிஸ்தவம்
காட்டும்
பாதை

எந்த ஒரு
தொழிலையோ,
விற்பனையையோ தொடங்கும் முன்னர் முதலில்
வருவது அது பற்றிய விளம்பரம்தான். சில சமயங்களில்
விளம்பரம் வந்து,
அதில்
குறிப்பிட்டிருக்கும் தொழிலோ,
விற்பனையோ நடை
பெறாமல் கூட போகலாம். ஆனால்
விளம்பரம் மட்டும் இல்லாமல் போகாது. விளம்பரம் போலியா,
உண்மையா என்பது பற்றிக்கூட
நம்மில் பலர் கவலைப்படுவதில்லை. போலி விளம்பரங்களில்தான்
பூச்சு அதிகம் இருக்கும்.
பகட்டு அதிகம் தெரியும். அவற்றை நம்பிக் கெட்டவர்கள்
நாள்தோறும் பெருகி வருவதை நாம்
தினந்தோறும் செய்திகளின் வழியாக அறிகிறோம். நல்ல
பொருட்களுக்கு விளம்பரம்
தேவைப்படாது. விற்பனையில் மட்டுமல்ல;
வாழ்க்கையிலும் எந்த
ஒரு
நற்செயலையும்
விளம்பரப்படுத்திக்கொள்ளக் சுடாது என்பது இயேசு பிரானின்
கருத்தாகும்.
பிறருக்குச் செய்யும் தருமச் செயல் நல்லதுதான். என்றாலும்
அதைச் செய்பவர்
மற்றவரிடத்தில் வெளிப்படுத்தினால்,
அது
ஒருவகையில் புகழ் பெறுவதற்காகச்செய்யப்படும் செயலாகப்
போய்விடும். கொடையைக் கொடுத்துப் புகழை வாங்குகிற
விற்பனை போல ஆகிவிடும். எனவே தருமம்
செய்கிறவர்களுக்குக்கூட எச்சரிக்கை செய்யும்
விதமாக இயேசு அருளுரை கூறியுள்ளார்:
‘நீங்கள்
தர்மம் செய்யும்போது உங்கள்
வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.
அப்பொழுது நீங்கள் செய்யும்
தர்மம் மறைவாயிருக்கும்’
என்கிறார். (மத்தேயு நற்செய்தி,
6ம்
அதிகாரம்,
3, 4).
மறைவாகச் செய்ய வேண்டுவது தர்மம் என்று இயேசு
கூறியிருந்தாலும்,
எவ்வகை
உதவியைச் செய்தாலும் அவை எல்லாவற்றுக்கும் இந்த அருளுரை
பொருந்தும். பல்வேறு
உதவிகளை நாம் செய்திருக்கக் கூடும். ஒரு பணக்காரர்,
ஏழை
மாணவன் ஒருவனுக்குக்
கல்விக் கட்டணம் செலுத்தியிருக்கலாம். ஒரு மருத்துவர் ஒரு
நோயாளிக்கு இலவசமாக
மருத்துவம் பார்த்திருக்கலாம். இவை எல்லாம் உதவிகளாக
இருந்தாலும்,
மற்றவருக்குத்தெரிந்துவிட்டாலே அவை பயனற்றவை ஆகிவிடும்
என்ற உணர்வுநமக்குவரவேண்டும்.
அப்படியானால் அவ்வுதவியை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
அது
நமது கடமைகளுள் ஒன்று
என்று எண்ண வேண்டும். கடமையைச் செய்வதற்குக் கடவுள் நமக்கு
ஒரு வாய்ப்பைத்
தந்துள்ளதற்கு நன்றி சொல்ல வேண்டும். மற்றொருவருக்குக்
கொடுக்கின்ற அளவுக்கு
நம்மிடம் பொருள் இருந்ததால்தானே நாம் இந்த உதவியைச் செய்ய
முடிந்தது! அவ்வாறு
கொடுக்கும் நிலையில் நம்மை உயர்த்தி வைத்திருக்கும்
இறைவனுக்கு நாம் நன்றிசொல்லவேண்டும்.
ஆனால் தற்கால உலகம் இதற்கு நேர்மாறானது. விளம்பரமே
எல்லாவற்றுக்கும்
அடிப்படையாக விளங்குகிறது.
‘ஒரு
காசுக்கு ஊசி வாங்கி,
அதில் ஒன்பது காசுக்குத் தன்
பெயரை வெட்டித் தானம் செய்தான்’
என்றொரு பழமொழி உண்டு. அதை மெய்யாக்கும் வகையில்
பலர் வெற்று விளம்பரங்களால் கொடிகட்டிப் பறக்கக் கூடும்.
ஆனால்,
காலப்போக்கில்
உண்மைச் சாயம் வெளுத்துவிடும். இத்தகைய சபலங்களுக்கு நாம்
ஆட்படக் கூடாது
என்பதற்காகத்தான் இயேசு தன்னுடைய இடக்கைக்குக்கூட தெரியக்
கூடாது என்றார்.
jpdfud;
itfhrp.01.2010
|