HAPPY NEW YEAR
Tamil Good News!
Jesus Christ, John 3:16-17
“For God loved the world so much that he gave his one and only Son, so that everyone who believes in him will not perish but have eternal life. God sent his Son into the world not to judge the world, but to save the world through him.”
Matthew 19:26
“With man this is impossible, but with God all things are possible.”
Previous
Next

விக்ரர் ஞானப்பிரகாசம்

பாகிஸ்தான் குவேற்றா மறைமாவட்டத்தின் ஆயராகவும் பணியாற்றிய பேரருட் கலாநிதி விக்ரர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகை அவர்கள் இன்று 12/12/2020 பாகிஸ்தானில் காலமாகிவிட்டார்
அதிவண. பேரருட் கலாநிதி விக்ரர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகை. * இலங்கையின் பாஷையூர் கத்தோலிக்க திரு அவையின் மைந்தனும், அமலமரி தியாகிகள் சபையைச் சார்ந்தவரும், பாகிஸ்தான் குவேற்றா மறைமாவட்டத்தின் ஆயராகவும் பணியாற்றிய பேரருட் கலாநிதி விக்ரர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகை அவர்கள் இன்று 12/12/2020 பாகிஸ்தானில் காலமாகிவிட்டார். * ஆண்டகை அவர்கள் 1940/11/21ல் யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்தார். * தனது பாடசாலைக் கல்வியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நிறைவு செய்தார். * இறை அழைத்தலுக்குப் பணிந்து குருமடம் நுழைந்து களுத்துறையில் 1959ல் தனது முதலாவது நித்திய வாக்குறுதியை அளித்தார். * கண்டி இலங்கை அன்னை தேசிய குருத்துவக் கல்லூரியில் தனது மெய்யியல், இறையியல் கல்வியை நிறைவுசெய்து 1966ல் அமலமரி தியாகிகள் சபையின் குருவாக திருப்பொழிவு செய்யப்பட்டார். * இலங்கையில் பல இடங்களில் பணியாற்றி பின் 1973ல் பாகிஸ்தான் சென்றார். * பல அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் துன்புற்ற மக்களுக்கும், இளையோருக்கும் இறைபணியாற்றினார். * 1979-1985 வரை பாகிஸ்தானில் அமலமரி தியாகிகள் சபையின் மேலாளராகப் பணியாற்றினார். * 2001ல் முன்னாள் திருத்தந்தை புனித 2ம் அருளப்பர் சின்னப்பரால் பாகிஸ்தான் குவேற்றா பிரதேச அப்போஸ்தலிக்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். * 2010 ஏப்ரலில் புதிதாக உருவாக்கப்பட்ட குவேற்றா மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக முன்னாள் திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பரினால் நியமிக்கப்பட்டார். * 2010 யூலை 16ல் கராச்சி புனித பற்றிக் பேராலயத்தில் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். * ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாலைவனங்களையும், மலைகளையும் கொண்டமைந்த தனது மறைமாவட்டத்தின் மக்களின் ஆன்மீக, கல்வி, பொருளாதார தேவைகளைப் பூர்த்திசெய்வதில் அதிகூடிய அக்கறை செலுத்தினார். * தனது மறைமாவட்டதில் மதவாதிகளாலும், தீவிரவாதிகளாலும், அடிப்படை வாதிகளாலும் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், பிரச்சினைகளையும் பொருட்படுத்தாது இன, மத, மொழி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களுக்கும் பணியாற்றினார். * 2013ல் ஓர் இஸ்லாமிய ஆயுதக் குழுவின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் உயிர் தப்பினார். * "நண்பனுக்காக உயிரைக்கொடுப்பதை விட மேலான அன்பு எதுவுமில்லை" எனும் கிறிஸ்துவின் வாக்கிற்கேற்ப மேய்ப்புப்பணி ஆற்றினார். * சில தடவைகள் யாழ். பாஷையூர் புனித அந்தோணியார் திருவிழா திருப்பலிகளை நிறைவேற்ற சொந்த மண் வந்து சென்றுள்ளார். * ஓர் தமிழ் மகனாய் அன்னிய மண்ணில் இறைபணியாற்ற ஆண்டகைக்கு இறைவன் அளித்த வாய்ப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். * ஆண்டகையின் இழப்பினால் வருந்தும் பாகிஸ்தான் குவேற்றா மறைமாவட்ட திரு அவைக்கும், அமலமரி தியாகிகள் சபையினருக்கும், யாழ். பாஷையூர் பங்குத் திரு அவைக்கும், ஆண்டகையின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். * ஆண்டகையின் ஆன்மா ஆண்டவன் திருவடிகளில் இளைப்பாற இறைவனை மன்றாடுகின்றோம். Copy. Silas Theepag